கடன் அட்டை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்;மத்திய வங்கி அதிரடி தீர்மானம்
15 Oct,2017
கடன் அட்டை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்;மத்திய வங்கி அதிரடி தீர்மானம்
ஸ்ரீலங்காவில் பயன்படுத்தப்படும் கடன் அட்டைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த அதியுச்ச வட்டி வீதத்தை இலங்கை மத்திய வங்கி நீக்கியுள்ளது.
இதன் காரணமாக கடனட்டை பாவனையாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய ஏற்கனவே காணப்பட்ட 24 சதவீத வட்டி, தற்போது நீக்கப்பட்டுவிட்டதால் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போதே சில கடன் அட்டை நிறுவனங்கள் வட்டி வீதத்தை 28 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.