மகனை பார்க்க சிறைக்குச் சென்ற மஹிந்த
15 Oct,2017
தனது மகன் நாமல் ராஜபக்ஸவைப் பார்ப்பதற்காக இன்று காலை தங்காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டுக்காக நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் நாமல் தங்காலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனிப்பட்ட விடயமாக ஜப்பான் சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஸ தனது மகன் கைது செய்யப்பட்டிருந்த செய்தி கிடைத்தவுடன் அவசர அவசரமாக ஜப்பானிலிருந்து நாடு திரும்பிய நிலையில், இன்று காலை தங்காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.