திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவிகள்!
13 Oct,2017
கல்கிசையில் உள்ள பிரபல பாடசாலையில் பயிலும் இரு மாணவிகள் மயக்கத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையில் டொபியை வாங்கி சாப்பிட்ட பின்னர் போதை மயக்கத்திற்குள்ளாகிய நிலையில் குறித்த மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லவ் என்ற பெயரில் ஆரம்பமாகும் டொபியை குறித்த மாணவிகள் கடை ஒன்றில் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே குறித்த மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த மாணவிகள் இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மொஹமட் ரிஸ்லி றிசார்ட் மொஹமட் றிசார்ட், மொஹமட் ரிஸ்வான் ஆகிய கடை உரிமையாளர்களே குறித்த மோசமான டொபியை விற்பனை செய்துள்ளனர்.
குறித்த உரிமையாளர்கள் இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, விற்பனை செய்யப்பட்ட டொபி இரசாயன பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.