ஃபின்லாந்தில் பொருளாதார அமைப்புகளை சந்தித்து பிரதமர் பேச்சு
10 Oct,2017
ஃபின்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில்விக்ரமசிங்க, அந்த நாட்டில் பல்வேறு பொருளாதார அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் விரிவாக்குவதே இந்த சந்திப்புகளின் நோக்கமாகும்.
அந்தநாட்டில் உள்ள பல்வேறு தொழில்முனைவோர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்துவதே தமது விஜயத்தின் நோக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபின்லாந்தை தளமாக கொண்ட 3 பாரிய தொழில்முனைவோர் ஒழுங்கமைப்புகளுடனான சந்திப்பின் போது பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.