ஜனாதிபதி இருந்த இடத்துக்கு அருகிலிருந்து துப்பாக்கி மீட்பு
09 Oct,2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (09) கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலன்னறுவை அதுமல்பிடிய வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த போது இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மருந்து நிரப்பி சுடப் பயன்படுத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கியைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.