சர்வதேச வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
09 Oct,2017
வங்கி கணினி கட்டமைப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து 600 மில்லியன் அமெரிக்கா டொலர்களை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில் தாய்லாந்தில் பதிவாகியது.பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலும் குறித்த பணம் பரிமாறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பணத்தில் இந்நாட்டு அரச வாங்கி ஒன்றின், தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு ஒரு மில்லியன் அமெரிக்கா டொலருக்கு மேற்பட்ட தொகை பரிமாறப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.