அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம்
09 Oct,2017
கொடிகாமப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலம் இன்று உழவு இயந்திரத்தை கைப்பற்றிய அதிரடிப்படையினர் சாரதியையும் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொடிகாமப் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட உழவியந்திரத்தினை துப்பாக்கி பிரயோகம் செய்து விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் கொடிகாமம் கச்சாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெற்பேலிப் பகுதியில் இருந்து மணல் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு கச்சாய்ப் பகுதியில் பயணித்துள்ளது. இதன்போது அப்பகுதியில் கடமையில் இருந்த விஷேட அதிரடிப்படையினர் குறித்த உழவியந்திரத்தை மறித்துள்ளனர்.
எனினும் உழவியந்திரம் நிறுத்தாமல் செல்லவே சக்கரங்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு உழவியந்திரத்தை நிறுத்தியுள்ளனர். உழவியந்திரத்தோடு அதன் சாரதியையும் கைது செய்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உழவியந்திரம் நீதிமன்றத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.