வடகொரியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க இலங்கை தீர்மானம்
08 Oct,2017
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வடகொரியா, உலக நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றது.
இதற்கமைய வடகொரியாவிற்கு எதிராக தடைகளை விதிக்கும் யோசனை ஒன்றை தமது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
இதற்கமைய வடகொரியாவினால் மேற்கொள்ளப்படும் ஆயுத போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை இலங்கையில் மேற்கொள்ள முடியாதவாறு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.