கோத்தபாய கைது?
07 Oct,2017
–
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை கைது செய்யப்படாத கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட காலமாக அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவர் கைது செய்யப்படவுள்ளதாக பாதுகாப்பு தரப்பினை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள குறித்த பிரபலம், எதிர்வரும் நாட்களில் மீண்டும் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை இந்த சந்தர்ப்பத்தில் செயற்படுத்தப்படவில்லை என்பதுடன், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தும் உள்ளது. அதற்கமைய கைது செய்யப்படவுள்ள பிரபலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.