வெளிநாட்டில் இருந்து சிறிலங்கா சென்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
06 Oct,2017
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் சிறிலங்கா சென்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சந்தேகத்துக்குரியவர், ஒரு லட்சம் ரூபா
எனினும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகத்துக்குரியவர், கடந்த 2012 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்பகுதியிலிருந்து படகு மூலமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இதையடுத்து, குறிப்பிட்ட காலம் அவர் அங்கு பணிபுரிந்துள்ளார்.
பின்னர், அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட அவர், சிறிலங்காவுக்கு திருப்பியனுப்பட்ட நிலைலேயே கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.