விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ்
03 Oct,2017
வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மாநாயக தேரர்களை சந்தித்தமை வரவேற்கத்தக்கது. சிங்கள மக்களின் நிலைமைகளை அவர் விரைவில் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். வடக்கு மக்களின் தேவைகளை இராணுவத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள இராணுவத்துடன் கலந்துரையாட வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கின் முதல்வர் விக்கினேஸ்வரனுடன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சந்திப்பொன்றை மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.