சிங்கள ராவய அமைப்பின் தலைவர் கைது
02 Oct,2017
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் ஏதிலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.