சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்
30 Sep,2017
எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினரின் எட்டாவது மாநாட்டு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அதில் பங்கேற்பதற்காக அவர்கள் நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
சார்க் அமைப்பின் செயலாளர் உட்பட சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய ஏழு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.