காங்கேசேன்துறை கிணற்றில் இருந்து விமான எதிர்ப்பு துப்பாக்கி ரவைகள் மீட்பு
26 Sep,2017
காங்கேசேன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பிரதேசத்தில் விமான எதிர்ப்பு துப்பாக்கி ரவைகள் சிலவற்றை காங்கேசன்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்தவர்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் சிசிரகுமார, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபேரத்ன, அமிர்தலிங்கம் உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 67 பெட்டிகளில் தலா 85 ரவைகள் வீதம் 5695 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ரவைகள் தொடர்பிலான மேலதிக விசாரணையை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்