ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இருந்த இடம் பிக்குளால் முற்றுகை
26 Sep,2017
தெஹிவளை பகுதியில் ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளைப் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குடியமர்த்தப்பட்ட வீட்டினை, பௌத்த பிக்குகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொலிஸாரால் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த அகதிகளை தாம் கைதுசெய்யவில்லையெனவும் அவர்களை ஆர்ப்பாட்டக்கார்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் அவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பதற்றம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.