இயற்கை அனர்த்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான உதவிகள் – உலக வங்கி
22 Sep,2017
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கான உதவிகளை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உலக வங்கியின் நிறைவேற்று இயக்குனர் எஸ்.அபர்னா உட்பட்ட உயர்மட்ட குழுவினர் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தபோது இதுகுறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது.
இது தவிர சுகாதாரம் கல்வி மற்றும் மொழி ஆற்றலை விருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கும் உலக வங்கி பூரண ஆதரவு வழங்கும் என இந்த சந்திப்பின்போது குறிப்பிடப்பட்டது.