மணப்பெண்ணின் சாதனை: உலகிலேயே மிக நீளமான புடவை
22 Sep,2017
மத்திய மாகாணம் கண்டியில் வித்தியாசமான உலக சாதனைத் திருமணம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை மக்கள் பலரும் வீதிக்கு வந்து அதிசயமாகப் பார்த்துள்ளனர்.
குறித்த திருமணத்தின் மணமகளாலேயே இந்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது. அதாவது 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை மணமகள் அணிந்து இந்தச் சாதனையை பதிவுசெய்துள்ளார்.
கண்டி கன்னொருவ சந்திக்கு மணமக்கள் வந்துள்ளனர். இதன்பின்னர் உலக கின்னஸ் சாதனையைக் கண்காணிக்கும் குழுமுன்னிலையில், ஒசரி புடவையின் நீளம் அளவிடப்பட்டுள்ளது.
குறித்த மணமகளின் புடவையானது கண்டி கெடம்பே சந்தியிலிருந்து ஈரியகம சந்தி வரை நீண்டு காணப்பட்டுள்ளது. இவற்றின் நீளம் குறித்த குழுவினரால் கணக்கிடப்பட்டு உலக சாதனையாகப் பதிவு செய்யபட்டுள்ளது.
குறித்த ஒசரி புடவை பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்டது. பின்னர் மணமகளுக்கு அணிவிக்கப்பட்டு வீதி நெடுகிலும் சுமார் 250மாணவர்களால் தாங்கிபிடிக்கப்பட்டிருந்தது. இதன்போது மத்திய மாகாணமுதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.