20வது திருத்த சட்டமூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேற்றம்
19 Sep,2017
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒரே தினத்தில் நடாத்துவது தொடர்பிலான 20வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலத்தின் வாக்கெடுப்பு மத்திய மாகாண சபையில் வெற்றி பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி 31 மேலதிக வாக்குகளால் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 20வது சட்டமூலம் மத்திய மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சட்டமூலம் இதுவரை ஐந்து மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.