பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவம்
13 Sep,2017
ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது, என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். தற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? என்பது பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது.
சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடிந்த தடைகளைப் போட முயற்சிக்கின்றன.இருந்த போதிலும் ஆளும் மைத்திரி- ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனைத் தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் காணப்படுகின்ற நிலையில் தீர்வு சாத்தியமா? என்ற சந்தேகங்களும் உள்ளன.
இவ்வாறான ஒரு நிலை சந்திரிகா அவர்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைப்பட்டபோது, என்ன நடந்தது என்பதனை விபரித்துள்ளார்.
சமாதான காலகட்டத்தில், பிரபாகரனும் நானும் சுமார் 42 அல்லது 43 கடிதங்கள் பரிமாறினோம். அதனூடாக அவர் ஈழத்தை தவிர வேறு எதனையும் கோரப்போவது இல்லை என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. அவர் தன் பிடியில் இருந்து ஒருபோதும் தளர்ந்தது கிடையாது.
மிகவும் கண்டிப்பான கடிதங்களையே நான் பெற்றுவந்தேன் என்கிறார். ஒட்டு மொத்தத்தில் சொல்லப் போனால் தன் கொள்கையில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் எப்பொழுதும் மாறியதே இல்லை என்றே கூறலாம் என்கிறார் அவர்.