அசாதாரண காலநிலை ஐந்து மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை
09 Sep,2017
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்பேற்படும் பகுதிகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அனர்த்த முகாமைத்துவ மையம் பொது மக்களைக் கேட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழைவீழ்ச்சி நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளது. இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயமுள்ளது.