
ஜகத் யுத்தக் குற்றச்சாட்டில் மாட்டியமைக்கு பெண்களே காரணம்
முள்ளாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டு சுமத்தியமைக்கு எதிராக நான்கு இலங்கையர்கள் உள்ளதாக பாதுகாப்பு பிரிவை மேற்கோள்காட்டி திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் இலங்கை நீதிமன்றத்தினால் தீவிரவாத செயற்பாடு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவராகும். இவர்களில் இருவர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூக்காவினால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை முன்னாள் இராணுவ தளபதிக்கு ஜகத் ஜயசூரிய தனக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டு இல்லை என தன்னிடம் குறிப்பிட்டதாக முன்னாள் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.