கோத்தாவின் தலைமையில் உருவாகும் ‘எலிய’ அமைப்பு
04 Sep,2017
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரில் புதிய சிவில் சமூக அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளார்.
பொரலஸ்கமுவில் உள்ள கோல்டன் ரோஸ் விடுதியில் வரும் 6ஆம் நாள் மாலை 5 மணியளவில், இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
புதிய அரசியலமைப்பு என்ற போர்வையில் நாட்டை ஒன்பது துண்டுகளாக கூறு போடும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அமைப்பை கோத்தாபய ராஜபக்ச உருவாக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புலமையாளர்கள், துறைசார் விற்பன்னர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.