அம்பாசிடர் ஜெகத் ஜயசூரியா தப்பி ஓட்டம்:
01 Sep,2017
.............................
<img data-cke-saved-src="\" src="\"uploads/untitledjjjuuuyy" tttt66.png\"="">
இலங்கை பிரேசில் நாட்டு தூதுவராக முன்னாள் ராணுவ தளபதி ஜெகத் ஜயசூரியாவை நியமித்தது. இவருக்கு பிரேசில், கொலம்பியா , பெரு, சில்லி, ஆஜன்டீனா மற்றும் செரனா ஆகிய நாடுகளில் டிப்ளோ மெட்டிக் இமியூன் என்னும் பாதுகாப்பு இருந்தது.(Diplomatic immunity) அவரை பொலிசார் எந்த காரணத்திற்காகவும் கைதுசெய்ய முடியாது. இதேவேளை இவர் மீது அன் நாடுகளில் வழக்கு பதியவும் முடியாது. இன் நிலையில் தமிழ் வக்கீல்கள் சிலர், (ITJP என்னும் அமைப்பு) போர் குற்ற விடையத்தை கையில் எடுத்துள்ளார்கள். இதில் பிரித்தானியாவில் இயங்கிவரும் கீத் சொலிசிட்டரும் அடங்கும்.
இவர்கள் பிரேசில் மற்றும் ஏனைய 4 நாடுகளில் வழக்கை தொடுத்துள்ளார்கள். செரனா நாடு மட்டும் வழக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. இன் நிலையில் வழக்கை விசாரணைக்கு நீதிமன்றம் எடுத்துள்ளமையால், அன் நாட்டு அரசியல் சட்டப்படி அவர் தூதுவருக்கான சகல சிறப்பு சலுகைகள் மற்றும் பாதுகாப்பையும் இழக்க நேரிடும். இதனால் தற்போது ஜெகத் ஜயசூரியா பிரேசில் நாட்டில் இருந்து தப்பி இலங்கை நோக்கி பறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்த அதிர்வு இணையம் பிரேசில் நாட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு தொலைபேசி அழைப்பை விடுத்தபோதும். அங்கே எவரும் இல்லை என்ற செய்தி கிடைத்துள்ளது.
அங்கே நிலைகொண்டிருந்த ஜகத் ஜயசூரியாவின் ஆட்கள் அனைவரும் எங்கே என்பது ஒரு புறம் இருக்க. பல யுத்தக் குற்ற சாட்சிகளை முன்வைத்து திறமையாக இந்த வழக்கை பதிவுசெய்த அனைத்து தமிழ் சொலிசிட்டர்மார்களுக்கும் நன்றி. இதில் பலர் வேலைசெய்திருப்பார்கள். ஆனால் அவர்களது பெயர் வெளியே வருவது இல்லை. பல தமிழ் அமைப்புகள், பிரித்தானியாவில் இயங்கிவந்தாலும், ஒரு பெயர் அளவில் தான் அவர்கள் தற்போது இயங்கி வருகிறார்கள். இதிலும் பி.ரி.எஃப் என்ற அமைப்பு, லண்டனில் உள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தி தொகுதிக்கு , தலைவர்களை போடுகிறது. இதற்கும் ஒரு கோஷ்டி அடி பிடிதான். இப்படி தலைவர், தேர்தல், என்று பல அமைப்புகள் மக்களை திசை திருப்பி அரசியல் போதையில் மிதக்க வைக்க வைக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அரசு, ITJP என்னும் அமைப்பு போன்ற ஒரு சில அமைப்புகள் மட்டுமே தற்போதும் கூட சளைக்காமல் தமிழர் விடிவுக்காக பாடுபட்டு வருகிறது. அந்த் வகையில் மிகவும் திறமையாக செயல்பட்டு, இந்த வழக்கை பதிவுசெய்து, இன்றுவரை போர்குற்றம் புரிந்த நபர்களை சளைக்காமல் துரத்திவரும் தமிழர்களுக்கு ஒரு சலியூட் வைக்கவேண்டும்.