கோணமலையில் முதலையிடம் சிக்கியவரை காப்பாற்றிய நண்பர்கள்
29 Aug,2017
...............................
திருகோணமலையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் ஒருவர் கந்தலாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தினேஷ் மதுஷங்க என்பவரே இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மணல் அகழ்வு பணிக்காக நண்பர்களுடன் மகாவலி ஆற்றை கடந்து சென்ற போது தனது காலை யாரோ பிடித்து இழுப்பது போன்று உணர்ந்துள்ளார்.
எனினும் காலை வெளியே எடுக்க முயற்சித்த போதிலும் அவரால் எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் நண்பர்களும் இணைந்து அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்த போதே குறித்த நபரின் கால் முதலை ஒன்றின் வாயில் இருப்பதை அவதானித்துள்ளார்கள்.
இதையடுத்து முதலையுடன் போராடி இவர்கள் தமது நண்பரை காப்பாற்றியுள்ளார்கள். இதில் படுகாயமடைந்த நபர் தற்போது கந்தலாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்