இலங்கை வருவதற்கு 1300 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு
28 Aug,2017
...............................
இலங்கைக்கு கடந்த ஆண்டில் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஆயிரத்து 300 வெளிநாட்டவர்களுக்கு குடிவரவு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பூகோள பாதுபாப்பு நிலைமைகள் காரணமாகவே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஷா வழங்குவதற்கு முன்னர், பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சிரியா முதலான நான்கு நாடுகளுக்கும் தேசிய புலனாய்வு சேவையின் அனுமதி கிடைக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த நான்கு நாடுகளிலிருந்தும் இலங்கை வருவதற்கு முயற்சித்த பலருக்கு இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 299 பேருக்கும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 166 பேருக்கும், எகிப்தைச் சேர்ந்த 41 ஒரு பேருக்கும் மற்றும் சிரியாவைச் சேர்ந்த ஆறு பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 217 இந்தியர்கள், 210 சீனர்கள் மற்றும் 78 நேபாளியர்களுக்கும் இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டதென்றும் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.