இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்கு புதிய செயற்பாடு
26 Aug,2017
................................
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்கு புதிய வியூகம் அமைக்கப்படவுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.
கண்டி – தலதாமாளிகையில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குறித்த தெளிவில்லாமல் அத்துமீறி பிரவேசிக்கின்றனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இலங்கை இந்திய கடல் எல்லையை அடையாளப்படுத்தி அதனை அவர்கள் மீறும் போது எச்சரிக்கை சமிஞ்சையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடுகளுக்காக புதிய இயந்திர படகுகளை இலங்கை கடற்படையுடன் இணைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கடல்வழியாக இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்காக ஒரு வருட கால அவகாசம் வழங்குமாறு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்