காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்குமாறு கோரி திருகோணமலை மக்கள் ஆர்ப்பாட்டம்
22 Aug,2017
................................
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசித்து தாக்குதல்களை நடத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தி, திருகோணமலை – பதவிசிறிபுர – மீகஸ்வௌ பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்காரணமாக புல்மோடை – பதவிய வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில தினங்களில் இந்த பகுதியில் 5க்கும் அதிகமான வீடுகள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த கிராமத்துக்கு காட்டு யானைகளைத் தடுக்கும் வகையிலான வேலி அமைக்கப்பட்டுள்ளபோதும் அது பாதுகாப்பானதாக இல்லை என்று கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.