அனுராதபுரம் சிறை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது
22 Aug,2017
...............................
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.
சிறைச்சாலைகள் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து, விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலிறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் நேற்று ஆரம்பித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்து உணவினைத் தவிர்த்தால், அவர்களை சிறைச்சாலை மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைச்சாலை ஆணையாளர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது