வரலாற்றில் முதல் தடவைஇலங்கைக்கு வரும் பெரிய விமானம்
10 Aug,2017
.............................
–
இலங்கை விமான சேவை வரலாற்றில் பெரிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரவுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
இந்த மாதம் 14ஆம் திகதி இந்த விமானம் வரவுள்ளது. கொழும்பு மற்றும் டுபாயைத் தொடர்புபடுத்தி இந்தப் புதிய விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.
மேலும் 6 விமானங்கள் எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை கேந்திரமாக கொண்டு இயங்கவுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை சீரமைக்கப்பட்ட பின்னர் பெரும் எண்ணிக்கையிலான விமானங்கள் தரையிறங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னர் 45 மீற்றர் அகலத்தை கொண்டதாக இருந்தக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை தற்பொழுது இரண்டு பக்கங்களிலும் 15 மீற்றரிலிருந்து 75 மீற்றர் வரையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.