13 இலங்கையர்கள் நாடுகடத்தல் – உறுதி செய்தது அவுஸ்ரேலியா
08 Aug,2017
............................
இலங்கைக்கு கடந்த வாரம் 13 பேர் நாடுகடத்தப்பட்டமையை அவுஸ்திரேலியாவின் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது.
குறித்த 13 பேரும் அவுஸ்திரேலியாவில் அகதிகளாக தங்கி இருக்க தகுதி அற்றவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்தே அவர்கள் நாடுகடத்தப்பட்டதாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் அவர்கள் அண்மையக் காலத்தில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.