சீன மருத்துவக் கப்பல் இலங்கைக்கு விஜயம்!
07 Aug,2017
..........................
சீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவக் கப்பலொன்று இன்று இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
Hepingfangzhou என்ற குறித்த கப்பலும், அதிகாரிகளும் கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் வசிக்கும் சீன நாட்டவர்களும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கப்பல் உலகம் முழுவதும் அவசர சூழ்நிலைகளில் விரைவாகச் சென்று மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கப்பல் கொண்டுள்ளது. குறித்த கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் நான்கு நாட்கள் நங்கூரமிட்டிருக்கும்.
இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது