குப்பை மலை சரிந்து விழும் காட்சி! VIDEO
18 Apr,2017
மீதொட்டமுல்ல குப்பைமேடு சரியும் போது கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இதில் குப்பை மலை பாரிய சத்தத்துடன் சரிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மக்களின் கதறல் குரல்களும், குழந்தைகளின் சத்தங்களும், அழுகையும் இந்த காணொளியில் பதியப்பட்டுள்ளது.
வீடுகள், வாகனங்கள் மக்களின் உடமைகள் என அனைத்தும் குப்பைமலைக்கு இரையாவது குறித்த காணொளியினூடக தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளின் போதே இன்று இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அனர்த்தம் காரணமாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குப்பைமேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 30 பேர் தொடர்பிலான தகவல்கள் தற்போது வரையில் கிடைக்கப் பெறவில்லை என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.