300 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்தது; 53 பேர் காயம்
07 Apr,2017
.......................
நாவலப்பிட்டியிலிருந்து தொளஸ் பாகையை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 53 பேர் காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பஸ் நேற்று பகல் 12 மணியளவில் நாவலப்பிட்டி நகரிலிருந்து தொளஸ்பாகை நோக்கி பயணித்தபோது கோணவல என்ற இடத்தில் வைத்து பாதையைவிட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்தது.
இதனையடுத்து காயமடைந்த 53 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலதிக சிகிச்சைக்காக நால்வர் கண்டி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்த விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.