கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை – இலங்கை
17 Mar,2017
.......................
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்புஸ
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த
எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் இவர்களை கப்பம் இன்றி விடுவித்துள்ளனர்.
குறித்த கப்பலின் தலைவரான தமிழர் நிக்கலஸ் அந்தோனி இந்த செய்தியை
உறுப்படுத்தியுள்ளார்.
குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் தாக்குதல்களை
நடத்தினர்.
இந்த மோதலின் போது ஹபோ நகரில் இரண்டு பேர் காயமடைந்ததாக வெளிநாட்டு
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தாக்குதல்களை நிறுத்துமாறு கப்பல் தலைவரால் அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில்
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனை அடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும்,
எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொள்ளையர்கள் அற்ற சமுத்திரம் என்ற
சர்வதேச அமைப்பின் பிராந்திய முகாமையாளர் ஜோன் ஸ்ரீட், வாழ்வா சாவா என்ற
அடிப்படையில் சோமாலிய படையினரால் கடற்கொள்ளையர்களுக்கு வழங்கப்பட்ட
வாய்ப்பினாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறினார்.
அத்துடன் கப்பலைக் கடத்திய கடற்கொள்ளையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால்
மன்னிப்பு வழங்கவும் இணங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் இறுதியாக 2012ம் ஆண்டு ஒரு வர்த்தக கப்பல்
கடத்தப்பட்டிருந்தன் பின்னர், 5 வருடங்களின் பின்னர் ஆரிஸ் 13 என்ற இந்த
கப்பல் கடத்தப்பட்டது.
2010ம் ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் 50 கப்பல்கள் வரையில்
கடத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் அதிகமான கடலோடிகள் பணயக்கைதிகளாக
பிடிக்கப்பட்டதுடன், 7 பில்லியன் டொலர்கள் வரையில் நட்டம்
ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பணியாளர்கள் 8 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டகப்பல் மீட்கப்பட்டமை உலக இராஜதந்திர அளவில் கிடைத்த மிகப் பெரிய வெற்றிஎன இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக இந்தியப் பெருங்கடலில் உபாய ரீதியிலான முக்கியத்துவம்
அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கப்பல் மற்றும் அதில் இருந்த 8 பணியாளர்களை காப்பாற்றுவதற்காக
அரசாங்கம் ராஜந்திர நடவடிக்கை முன்னெடுத்தது.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை கடற்படையை அழைத்து குறித்த நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.
குறிப்பாக தாக்குதல் இன்றி கலந்துரையடால் மூலம் கடத்தப்பட்ட கப்பல்
மீட்கப்பட்டமை சிறப்பம்சம் எனவும் அவர் குறிப்பிட்டார்.