மஹிந்த ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவாரா?
16 Mar,2017
மஹிந்த ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவாரா?
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று முன்னிலையாக உள்ளார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து இன்று மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக கடயைமாற்றிய காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கையினால் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கை ரூபவாஹினி அலைவரிசையில் மஹிந்தவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்தவிடம் இன்றைய தினம் விசாரணை செய்யப்பட உள்ளது.
இன்று முற்பகல் 10.00 மணியளவில் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக்ச நிராகரித்து வருவதுடன் இது அரசியல் பழிவாங்கல் என குற்றம் சுமத்தியுள்ளார்