நோர்வே எரிக் சொல்ஹெய்முடன் இணைந்து செயற்பட உள்ள இலங்கை
19 Jan,2017
............
நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்முடன் இணைந்து அரசாங்கம் செயற்பட உள்ளது.
கடந்த காலங்களில் சமாதான முனைப்புக்கள் தொடர்பில்இணைந்து செயற்பட்டிருந்த சொல்ஹெய்ம் தற்பொழுது சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பில்இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றாடல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக சொல்ஹெய்ம் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைப் பொருளாதாரம், பேண்தகு சுற்றுலாத்துறை, வனவிலங்குகள், நீர்வளம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் இலங்கைக்கான சமாதான ஏற்பாட்டாளராக சொல்ஹெய்ம் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.