இலங்கை வரும் டென்மார்க்கின் வர்த்தக தூதுக்குழு!
02 Nov,2016
இலங்கை வரும் டென்மார்க்கின் வர்த்தக தூதுக்குழு!
டென்மார்க்கின் உயர்நிலை வர்த்தகக்குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தக்குழு டென்மார்க்கின் தூதுவர் பீட்டர் டாக்சோ- ஜென்சன் தலைமையில் இலங்கைக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரவுள்ளது.
நவம்பர் 4ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தக்குழுவில் டென்மார்க்கின் 15 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, இந்த குழுவினர் இலங்கையில் அடித்தள கட்டமைப்பு மற்றும் குடிநீர், மின்சக்தி போன்ற துறைகள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.