பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்க விடமாட்டேன்! - ஜனாதிபதி
14 Oct,2016
பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்க விடமாட்டேன்! - ஜனாதிபதி
அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அகற்ற தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
“சிலர் குற்றம்சாட்டுவது போன்று நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ அல்ல. அதேபோல் இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புத் படையினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ அல்ல. மாறாக நாட்டின் சுதந்திரம் இறையாண்மை மற்றும் வரலாற்று மரபுரிமைகளை உயர்ந்த பட்சம் பாதுகாத்து சுதந்திர ஜனநாயக நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவே ஆட்சிக்கு வந்தேன் என்று தெரிவித்தார்.