ராஜபட்சே ஆலோசகருக்கு மரண தண்டனை
09 Sep,2016
கொழும்பு : இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சேவின் ஆலோசகராக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான டுமின்ந்தா சில்வாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் அந்நாட்டு ஐகோர்ட் மரண தண்டனை அளித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரத லட்சுமன் பிரேமச்சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், ராஜபட்சேவின் ஆலோசகராகவும் இருந்தவருமான டுமின்ந்தா சில்வா உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அரசியல் பிரச்சனையாக உருவெடுத்த இவ்வழக்கில், ராஜபட்சேவின் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொழும்பு ஐகோர்ட் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.