ஆயுர்வேத நிலையமொன்றில் விபச்சார விடுதில் பணியாற்றிய 12 பெண்கள் கைது
17 Jul,2016
கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையமொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றில் பணியாற்றிய 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று மாலை இடம் பெற்ற குறித்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட பெண்கள் 27 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆயுர்வேத நிலையத்தினை நிர்வகித்து வந்த பெணும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் பயாகல , அம்பலாங்கொடை, பண்டாரவளை, மாலபே மற்றும் தம்புள்ளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்சை நீதவானிடம் முன்னிலைப்படுத்த கல்கிஸ்சை பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.