13 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்
16 Jul,2016
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்
க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், அங்கு வட மாகாண முதாலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் அங்கு மாகாண ஆளுனர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
மேலும், அரசியலமைப்பு திருத்தம், நல்லிணக்கம், மீள்குடியமர்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன் கனடாவின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும், கண்ணிவெடி அகறற்றல் மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்களையும் அவர் நேரில் பார்வையிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற