இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே கைது[நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை.!
12 May,2016
இலங்கையின் மாத்தறை பகுதியில் நிலப் பிரச்சனை தொடர்பாக இலங்கை முன்னாள் அமைச்சரும் முன்னாள் அதிபர் ராஜே பக்சேவின் தம்பியுமான பசில் ராஜபக்சே கைது செய்யபட்டார். பின்னர் அவர நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் நிதிமோசடிகள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றம் ஜாமினில் விடுதலையானர் இந்த் நிலையில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஷில் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை.!
பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடுமையான நிபந்தனைகளுடன் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 16 இலட்ச மூன்று சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணிக்கு இடையில் நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பகுதியிலுள்ள காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.