இலங்கை இராணுவம் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு பிரியாவிடை
06 May,2016
இலங்கை இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
பனாகொடவில் உள்ள இலகு காலாட்படைப் பிரிவின் தலைமையகத்தில் நேற்று மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய இவருக்கு, பிரியாவிடை அளிக்கும் வகையில், தேனீர் விருந்துபசாரம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில், சிறிலங்கா இராணுவத்தின் மூத்த தளபதிகள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவத்தில் இருந்து, ஓய்வுபெறும், போர்க்குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளில் இவர் இரண்டாமவராவார்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசெம்பர் 25ஆம் நாள், மேஜர் ஜெனரல் ஜெயத் டயஸ் ஒய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது