மஹிந்தவுக்கு 72 மணி நேரத்திற்குள் இராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும்!
04 May,2016
.
.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பு அடுத்துவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் மீள வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்காது போனால் மக்களின் ஆதரவுடன் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் பிக்குகளின் குரல் எனும் அமைப்பின் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த தலைவர் ஒருவரினது பாதுகாப்பை நீக்குவது அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.