இலங்கையில் வெளிநாட்டு கடற்படை முகாம்கள்?
21 Apr,2016
இலங்கையில் வெளிநாட்டு கடற்படை முகாம்கள்?
அமெரிக்கா உட்பட சில சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளும் இரகசிய ஒப்பந்தங்கள் மூலமாக இலங்கையில் அந்நாடுகளின் கடற்படை முகாம்கள் மறைமுகமாக நிறுவப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அமெரிக்கா, தென்கொரியா உட்பட சில சர்வதேச நாடுகளுடன் இணைந்து இரகசிய ஒப்பந்தங்கள் மூலமாக நாடளாவிய ரீதியில் இரகசிய கடற்படை முகாம்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்முதல் கட்டமாக திருகோணமலையில் கடற்படை முகாமொன்றை தற்போது நிறுவி வருகின்றது என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
12 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.