எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், கடந்த 3 மாதங்களில் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 99 மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.வவுனியா, யாழ்பாணம் உள்ளிட்ட சிறையிகளில் இருந்து விடுதலை செய்யப்படும் தமிழக மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.99 பேரில் 6 சிறுவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.