இலங்கைக்கு 150 படகுகளை வழங்குகிறது இந்தியா
02 Apr,2016
இலங்கைக்கு 150 படகுகளை வழங்குகிறது இந்தியா
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண மீனவர்களுக்காக ரூ.4.5 கோடி மதிப்பிலான 150 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இந்தியா வழங்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம், இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா மற்றும் இலங்கை மீன் பண்ணைகள், நீர்வள மேம்பாட்டுத் துறையின் செயலர் எம்.எம்.ஆர்.அதிகாரி இடையே கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முல்லைத் தீவைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு, ரூ.4.5 கோடி மதிப்பிலான 150 படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் இந்தியா வழங்கவுள்ளது. இலங்கை நீர்வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.