பசில் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டமை உறுதிவிமானப் படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ச உள்நாட்டு ரீதியான பயணங்களை மேற்கொண்டிருந்தார். முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரிலேயே உள்ளக விமானப் பயணங்களுக்கான 1560 லட்சம் ரூபா பணத்தை விமானப்படைப் போக்குவரத்துப் பிரிவிடம் வழங்கியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உள்ளக விமானப் பயணங்களுக்காக கிராம எழுச்சி வேலைத்திட்ட நிதியிலிந்து 1560 லட்சம் ரூபா நிதியை வழங்கியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் பாரிய ஊழல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்தார். இவரிடம் நேற்று மாலை வரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த அரசாங்கத்தின் மூன்று வருட காலப் பகுதியில் மேற்கொண்ட சிவில் விமான போக்குவரத்துக் கட்டணமாக மாத்திரம் 1560 லட்சம் ரூபாவை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ செலவு செய்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.