இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! ஜோன் கெரிக்கு அமெரிக்க செனட்
15 Mar,2016
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! - ஜோன் கெரிக்கு அமெரிக்க செனட் வெளிவிவகார குழுத் தலைவர் கடிதம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியிடம், அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழுத் தலைவர் எட்வர்ட் ரொய்ஸ் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமெனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதனை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும், இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், எட்வர்ட் ரொய்ஸ் வலியுறுத்தியுள்ளார்.