14 அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது -வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கி சூடு
06 Mar,2016
பதின்னான்கு தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக 12ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளன.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகளை முழுமையாக புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்தள்ளதாகவும் தமக்கான முடிவொன்று கிடைக்கும் வரையில் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லையென உறவினர்கள் ஊடாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் இவ்வாறு தமது குடும்ப அங்கத்தவர்கள் சிறைகளில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அனுமதிக்கமுடியாது. ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கி சூடு
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சற்று முன்னர் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.